Kadhala KadamaiyaKadhala Kadamaiya
Tamil
Title rated 0 out of 5 stars, based on 0 ratings(0 ratings)
eBook, 2025
Current format, eBook, 2025, , Available.eBook, 2025
Current format, eBook, 2025, , Available. Offered in 0 more formatsஇந்நூலை நான் பல ஆண்டுகளின் முன் எழுதினேன். சில ஆண்டுகளின் முன் அச்சிட எண்ணினேன். அச்சிட்டேன் பல திங்கள் முன். ஒரு திங்கள் ஆயிற்று மேலட்டை போட. மிகவிரைவில் நூல் வேலை முடிந்துவிட்டதல்லவா?
ஏன் இப்படி? - நானே என் நூலை வெளியிடவேண்டும். எனக்குரிய அச்சகத்தில்தான் அச்சாக வேண்டும். - இப்படி ஓர் உறுதி.
உறுதி சரிதான். அவ்வுறுதியை நிறைவேற்ற அச்சகம் நல்ல முறையில் விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டதா? அதுதான் கிடையாது. மிகச் சிறிது.
இந்தப் பதிப்பு மிக மட்டம். என் வாடிக்கைக்காரர் உயர்ந்த பதிப்பைப் பெருவிலை கொடுத்து வாங்க வருந்துகிறார்கள். பணக்காரர் மட்டும் வாங்கினால் போதும் என்றும் நான் நினைப்பதில்லை.
இந்நூலின் நடை சிறிது கடினமாகத் தோன்றலாம்.
படிப்பவர்க்கு -அருகிலிருக்கும் மொழிகளையே அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. சிறிது தொலைவில் குவிந்திருக்கும் அரிய மொழிகளில் சிலவற்றையேனும் புலப்படுத்தத்தான் வேண்டும்.
என் தோழர் புலவர் சுந்தர-சண்முகனார் இந்நூலைப் படித்தார். படிப்பாரின் இலேசு கருதி முன்னே கதைச் சுருக்கத்தை உரைநடையில் தந்தால் நலமாயிருக்கும் என்றார். நீவிரே செய்க என்றேன். புலவர் எழுதிய கதைச் சுருக்க உரைநடையை முன்னே சேர்த்துள்ளேன்.
இக்கதையில் இடை நிகழ்ச்சிகள் பலவற்றைக் குறைத்துவிட்டேன். ஆதலால் என் எண்ணப்பதிப்பின் சுருக்கந்தான் இந்த அச்சுப் பதிப்பு.
இரண்டாம் பதிப்பு இது. முன்னைய பதிப்பு இலேசான நிலையில் அமைந்தது; இலேசான விலையில் அமைந்தது.
அழகிய உயர்ந்த பதிப்பையே வேண்டுகின்றனர் மக்கள், மக்கள் விருப்பம் என் விருப்பம். இது அழகிய - உயர்ந்த பதிப்பென்றே நான் நினைக்கிறேன்;
Title availability
About
Opinion
More from the community
Community lists featuring this title
There are no community lists featuring this title
Community contributions
There are no quotations from this title

From the community